வட்டார வளர்ச்சி aluvalakam, thiruppathur
'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' - ஊழல்

Miscellaneous

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் பிரமானம்பட்டி ஊராட்சிக்கு 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்விருதினை பெற எவ்வித தகுதியும் இந்த ஊராட்சிக்கோ ஊராட்சி மன்ற தலைவருக்கோ (மா.முத்துராமன்) இல்லை என்பதே உண்மை. 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' விருது பெற பல ஊழல்களை செய்திருக்கிறார்கள். 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' விருது பெற்றதற்கான காரணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தோம். அதற்கு 8 காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் இதில் 7 காரணங்கள் பொய்யான தகவல்கள்.

1. பிராமனம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 441 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிராமனம்பட்டியில் மட்டுமே 7 தனிநபர் கழிப்பறைகள் உள்ளது. மீதமுள்ள 343 கழிப்பறைகள் கட்டபடாமலே கணக்கு காட்டப்பட்டுள்ளது. அரசு மானியமாக ஒரு கழிப்பறைக்கு சுமார் 1200 (ஒரு வருடத்திற்கு முன்பு) ரூபாயிலிருந்து 2200 (தற்போது) ரூபாய்வரை கொடுக்கப்படுகிறது. இதன் அடிபடையில் பார்த்தால் ஒரு வருடத்திற்கு முந்தய கணக்குப்படி சுமார் 4.12 லட்ச ரூபாயும் தற்போதைய கணக்குப்படி 9.55 லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன்? இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானே பயப்பட வேண்டும்? இவர்கள் பயப்பட காரணம் என்ன? இவர்கள் கூறும் கணக்கு உண்மை எனில் எங்கள் ஊரில் கட்டப்பட்டதாக கூறும் 441 கழிப்பறைகளில் 434 கழிப்பறைகளை காணாமல் போன மாயம் என்ன? கண்டுபிடித்து தருவார்களா? இந்த அதிகாரிகள்? ஒரு சினிமாவில் வடிவேலு கிணறு காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுப்பார் அதுபோல் கம்ப்ளைன்ட் கொடுத்தால் கண்டு பிடித்து தருவார்களா? எங்கள் ஊரின் உண்மை நிலையை அறிய எங்கள் ஊருக்கு வந்து பார்யிடலாமே? தயக்கம் ஏன்? (ஊராட்சி மன்ற தலைவர் மா.முத்துராமன் வீட்டில் கழிப்பறை இல்லை என்பது குறிபிட்ட தக்கது)


Company: வட்டார வளர்ச்சி aluvalakam, thiruppathur
Country: India
  <     >  

RELATED COMPLAINTS

Barthi airtel prepaid
Airtel prepaid service

Police station
My family problem

BSNL / Broad band request
Too delay for Broad Band connection

Innter caste marriage office & govt employment
Caste marriage office & govt employment

Inter caste marriage office
Inter caste marriage

Airtel Prepaid
Airtel customer care NO care

Airtel Prepaid
Customer care no care

Airtel Prepaid
Airtel customer care officer = killers