Inconsumercomplaints.com » Miscellaneous » Review / complaint: Airtel Prepaid - Airtel customer care officer = killers | News #85847

Airtel Prepaid
Airtel customer care officer = killers

எனது மொபைல் எண் 9500345348. இந்த எண்ணிலிருந்து 121 யை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனவே 979068188 என்ற எண்ணிலிருந்து (06-07 அன்று இரவு 09:00 மணியளவில்)தொடர்பு கொண்டு பேசி கொண்டு இருந்தேன் அப்போது அந்த இணைப்பு துண்டிகப்ட்டது உடனே 9500345348 என்ற எனது எண்ணுக்கு (06-07 அன்று இரவு சுமார் 09:10 நிமிடத்திற்க்கு) 9994999782 என்ற எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் தன்னை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். நான் இணைப்பு பெரும்போது கொடுத்த அடையாள சான்று ஆவணங்கள் ம்ற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட தேதி நேரம் காரணம் ஆகியவற்றை மிக சரியாக கூறினார். பின் தாங்கள் அடிக்கடி வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொள்கிறீர்கள் எனவும் ஒரே புகாரை 20 முறை பதிவு செய்து இருப்பதாகவும் உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்து உள்ளீர்கள் எதற்காக இவ்வாறு புகார் செய்கிறீர்கள் என கேட்டு உன்னுடைய முகவரி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளது இனி அடிக்கடி வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொள்ளகூடாது எனவும் உன் சாதி என்னடா? என கேட்டு மிகவும் அசிங்கமான அநாகரிகமான வார்த்தைகளை கூறி திட்டினார். உடனே இது குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டேன் 24 மணி நேரத்தில் இந்த எண் குறித்த விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுப்போம் என்றனர். பின் 24 ம்ணி நேரத்திற்க்கு பின் 07-07 அன்று இரவு 10:00 ம்ணியளவில் 121யை தொடர்பு கொண்டேன் அப்போது பேசிய அதிகாரி 9994999782 இந்த எண் ஏர்டெல் நெட்வொர்க்கை சேர்ந்தது இல்லை என்றார் பின் பேசிய உயர் அதிகாரி இது ஏர்டெல் நெட்வொர்க்கை சேர்ந்ததுதான் என்றும் ஆனால் வாடிக்கையாளர் சேவை மையத்தை சேர்ந்தது இல்லை என்றும் கூறினார். 08-07 அன்று காலை 10:30க்கு நோடல் அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவரிடம் மேற்கண்ட புகாரை கூறினேன் இது குறித்து விசாரணை செய்துவிட்டு அவர் அரை ம்ணி நேரத்தில் நாங்களே தொடர்புகொள்கிறோம் என்றார் ஆனால் தொடர்புகொள்ளவில்லை. மாலை 03:45 க்கு மேல்முறையீட்டு அதிகாரியிடம் புகார்செய்தேன் உங்கள் புகார் குறித்து விசாரணை செய்து கொண்டுஇருக்கின்றோம் இன்று மாலைக்குள் எங்கள் நோடல் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார் என கூறினார் ஆனால் இது வரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவிலை என்பதோடு இது குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொண்டபோது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் நீங்கள் காவல் துறையினரிடம் புகார் செய்யுங்கள் எனவும் கூறுகின்றனர்என்னிடம் அநாகரிகமாக பேசிய நபரை கண்டுபிடிக்க வேண்டியும் எனது மொபைல் இணைப்பு குறித்த தகவல்கள் எப்படி அந்த நபருககு கிடைத்தது என்பது குறித்து விசாரணை செய்து சம்மந்தபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுகொள்கின்றேன்.


Company: Airtel Prepaid

Country: India

Category: Miscellaneous

0 comments

Information
Only registered users can leave comments.
Please Register on our website, it will take a few seconds.




Quick Registration via social networks:
Login with FacebookLogin with Google