Inconsumercomplaints.com » Career & Work » Review / complaint: Inter caste marriage office - Inter caste marriage | News #340936

Inter caste marriage office
Inter caste marriage

From: Mathan Kumar

Subject: மனு விண்ணப்ப கடிதம்

To: "[email protected]"

Date: Saturday, 25 February, 8:17 AM

அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த இதயம் கனிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்.

மதுரை தெற்கு வட்டம், கிழக்கு மதுரை கிராமம், கீரைத்துறை முனியாண்டி கோவில் தெரு, கதவு எண்: 23 A என்ற முகவரியில் வசித்து வரும் நான் திரு.R .நாகராஜன், என் மனைவி பெயர் C .ஜீவா. நான் இந்து துளுவ வெள்ளாளர் (B C ) இனத்தை சார்ந்தவன் (சான்று எண்: 2623017). எனது மனைவி இந்து சக்கிலியன் (S C ) (சான்று எண்:438318 ) இனத்தை சார்ந்தவள். நாங்கள் 09 .05 .2011 அன்று திங்கள் கிழமை கலப்பு திருமணம் செய்து கொண்டோம். நான் I .T .I (FITTER ) படித்துள்ளேன். எனது மனைவி M PHIL (ECONOMICS) 91 %. படித்துள்ளார். தமிழக அரசு கலப்பு திருமணம் செய்தவற்கு பல உதவிகள் செய்து தருவதாக கேள்விப்பட்டோம். மனதிற்கு சின்ன ஆறுதல் கிடைத்தது. அந்த சந்தோஷத்தில் நாங்கள் கலப்பு திருமண உதவி தொகைக்கு மதுரையில் சமூக நலத்துறை அலுவலகத்தில் 23 .05 . 2011 விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு சரியான தகவல் கிடைக்கவில்லை. அதற்க்கு காரணம் கேட்டால் அவர்கள் SENIORITY எண் படிதான் வழங்கிறோம் என்றார்கள். என்ன SENIORITY என்று கேட்டதற்கு, அவர்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் அரசாங்க பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கிறார்கள். எங்களை போன்ற கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு நிலை இதுதானா? உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பத்து மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அரசியல் பிரமுகர்களின் தெரிந்தவர்களுக்கு இரண்டு மாதங்களில் உதவி தொகை கிடைத்துள்ளன.

எங்களின் நிலை என்ன?

என் சொந்த ஊர் மதுரையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் அன்று கலப்பு திருமணம் செய்தவர்க்கு அரசாங்க வேலைக்கு முன்னுரிமை உண்டு என்று கேள்விப்பட்டு 21 .11 .2011 . அன்று விண்ணப்பித்துள்ளோம் .எங்கள் கோரிக்கை எண். M E / 11 / 05250 . ஆனால் இதுவரை எந்த ஒரு தகவல்களும் எங்களுக்கு வரவில்லை. அப்படியானால் கலப்பு திருமணம் செய்தவர்களின் கதி இதுதானா? எனது மனைவி M PHIL (ECONOMICS) 91 % மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் 25 .06 .2007 ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து அழைப்பு கடிதம் வந்தது (பதிவு எண் : F 10190072 ) அவர்கள் சான்றிதழை சரிபார்க்கும்பொழுது தமிழ் மொழி பாடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால் எனது மனைவியை நிராகரித்து விட்டனர். அப்படி என்றால்(கேந்திரிய வித்யாலய சங்கதன்) படித்தது என் மனைவியின் குற்றமா? இது போன்ற உயர்தரமான மத்திய அரசாங்க கல்வி நிறுவனங்களில் படித்தது குற்றமா? எங்களை போன்ற கலப்பு திருமணம் செய்தவர்களின் கண்ணீர் கதைகள் ஆயிரம் ஆயிரமாய் உள்ளன.

" ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் கருணை உள்ளம் கொண்ட பாரதத்தாய் அம்மா நீங்கள் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

தாயிடம் எங்கள் குறைகளை சொல்லி விட்டோம். எங்கள் குறைகளை தீர்க்க ஒரு நல்ல பதிலை தருமாறு பணிவன்புடன் மற்றும் கணிவுடன் கேட்டு கொள்கிறோம் .

உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த ஏழைகளின் கண்கள்

எங்களுக்கு 08 . 02 .2012 அன்று மதியம் 1 .45 மணிக்கு சிம்மராசியில் மகம் நட்சத்திரத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த பாரதத்தாய் புரட்சி தலைவி அம்மா அவர்களே பிறந்துள்ளார் என்ற சந்தோஷத்தில் என் அன்பு தாய்க்கு கடிதத்தை எழுதுகிறோம்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

R .நாகராஜன்.

C .ஜீவா.

இத்துடன் உரிய ஆவணங்களை இணைத்துள்ளேன்

1 ) என் மனைவியின் MA, MPHIL சான்றிதழ்கள்

2 ) என் மனைவியின் ஆசிரியர் தேர்வு வாரியம் (RRB ) அழைப்பு கடிதம் இரண்டு முறை

3 ) என் மனைவியின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை

4 ) எனது மனைவியின் 12th சென்ட்ரல் போர்டு of secondary education சான்றிதழ்கள்

5 ) எனது I .T .I (பிட்டர்) சான்றிதழ்கள்

6 ) எனது வேலை வாய்ப்பு அடையாள அட்டை

7 ) கலப்பு திருமண உதவித் தொகை விண்ணப்ப படிவம்

8 ) கலப்பு திருமண சான்றிதழ்கள்

9 ) மாவட்ட ஆட்சியாளர் குறை தீர்க்கும் விண்ணப்ப கடிதம்


Company: Inter caste marriage office

Country: India   State: Tamil Nadu   City: Madurai

Category: Career & Work

0 comments

Information
Only registered users can leave comments.
Please Register on our website, it will take a few seconds.




Quick Registration via social networks:
Login with FacebookLogin with Google