Inconsumercomplaints.com » People » Review / complaint: Police station - My family problem | News #492382

Police station
My family problem

அரியலூர் மாவட்டம்&வட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் கோவிந்தசாமி மகன் ராம்குமார், 2 படித்த பிறகு மேல்

படிப்பிற்க்காக அப்ளிகேசன் போட்டுக்கொண்டிருந்த போது, எனது

குடும்பத்திற்க்கும், என் மாமா குடும்பத்திற்க்கும் ஆறு வருடங்களாக பேச்சு

வார்த்தைக் கிடையாது, அதனால் என் மாமா கல்லங்குறிச்சியைச் சேர்ந்த

ராமசாமி உடையார் என்பவரிடம் தூது அனுப்பி அவர் மகளை திருமணம்

செய்துக்கொள்ள என்னை சொன்னார். எனது குடும்பத்தாருடன் கலந்து

முதலில் நானும் ராமசாமி உடையார் மட்டும் நத்தக்குழிச் சென்று ஜாதகம்

பார்த்தொம், நான் மாமாவிடம் கேட்டேன் எனக்கு இப்பொழுது திருமணம்

வேண்டாம், நான் மேல் படிப்பு படிக்கப்போகிறேன் என்றேன், அதற்க்கு என்

மாமா சொன்னார் தொழுதூரில் என் மகளுக்கு சொத்து இருக்கிறது அதை

வைத்து உன்னைப் படிக்க வைக்கிறேன் என்றார், அதனால் நான்

திருமணத்திற்க்கு சம்மதித்தேன். கடந்த 13/06/02 தேதியில் நத்தக்குழியை

சேர்ந்த என் தாய்மாமன் (மகாலிங்கம்) மகள் கமலாவதிக்கும் எனக்கும்

பெரியொர்களால் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடந்தன. திருமணத்திற்க்கு

பிறகு என் மாமனார் என்னை படிக்க வைக்க முடியாது என்றார், என் மகள்

சொத்துக்கும் என்க்கும் சம்பந்தம் இல்லை, தொழுதூரில் என் மாமியார்

சம்மதித்தால் நீ எது வேண்டுமானாலும் செய்துக்கொள் என்று கைவிரித்தார்,

நான் 2003 செப்டம்பர் முதல் 2011 மே வரை சிங்கப்பூருக்கு பணிபுரிய

சென்றிருந்தேன். நான் இடைஇடையில் ஊருக்கு வந்து போவேன். தொழுதூரில்

என் மனைவியின் அம்மா வழியில் ஆண் வாரிசு இல்லாத்தால் இரண்டில் ஒரு

பாகம் பிரித்து என் மனைவியின் பாட்டி கொடுத்தார். முதலில் இரண்டு முறை

சிங்கப்பூருக்கு செல்லும் போது என் மனைவியின் பணம் 2, 00, 000 ரூபாய் கடனாக

பெற்று. நான் சிங்கபூரில் பணம் சம்பாரித்து என் மனைவிக்கு குடும்பச் செலவு

(ம) கடன் தொகை அனைத்தும் கொடுத்துவிட்டேன். நான் என் மனைவி

பணத்தை கடனாக வாங்கி சிங்கப்பூருக்கு சென்றது என் மாமனாருக்கு

பிடிக்கவில்லை. அதனால் எனக்கு பல விதமான பிரச்சனைகளை செய்தார்.

என் மனைவியும் என் குடும்பமும் சந்தோசமாக இருந்த போது,

என் மாமனார் அவர் மகளிடம் ஏன் என் வீட்டிற்க்கு அடிக்கடி வரவில்லை,

உன் மாமனார் மாமியாருக்கு அடிமையாகி விட்டாயா? என்று திட்டியிருக்கிறார்.

என் மனைவி அவர் அப்பா பேச்சைக் கேட்டு என் குடும்பத்தில் சண்டையிட்டு

ஆகஸ்ட் ல் என் மாமனார் வீட்டுக்கு என் ஆண் குழந்தையுடன் சென்று

-விட்டாள், நான் சிங்கப்பூரிலிருந்து செப்டம்பர் ல் ஊருக்கு வந்து இரண்டு

வாரம் கழித்து என் மாமனார் வீட்டுக்கு தனியாக சென்று என் மனைவியையும்,

குழந்தையையும் அழைத்தேன். என் மாமனார் என் மனைவியின் சொத்தைத்

தன் வசப்படுத்திக்கொள்ள நினைத்து என் மனைவி குழந்தையை என்னுடன்

அனுப்ப மறுத்தார். நான் என் மகளை கல்லங்குறிச்சிக்கு அனுப்ப முடியாது,

நீயும் என் மகளும் தனி குடித்தனமாக தொழுதூருக்கு போய் குடும்பம்

நடத்துங்கள் என்றார். நானும் என் மனைவியும் தொழுதூருக்கு சென்று

தனிக்குடித்தனம் நட்த்தினோம். சில மாதத்தில் மீண்டும் நான் சிங்கப்பூருக்கு

சென்றேன். என் மனைவி தனியாக தொழுதூரில் இருப்பதைப் பயன்படுத்திக்

-கொண்டு எனக்கு தெரியாமல் என் மனைவியிடம் 22/12/05 அன்று 25, 000

ரூபாய் பணத்தைப் பெற்று ஐந்து வருடங்களாக திரும்பத் தரவில்லை. இதனால்

எனக்கும் என் மனைவிக்கும் நிறைய சண்டைகள் நடந்தன. என் மாமனார்

கணவன் மனைவி இடையே பலப் பிரச்சனைகளை ஏற்படுத்தினார். மீண்டும்

என் மாமனார் எங்களுக்கு பிரச்சனைக் கொடுத்தார், என் சம்மதம் இல்லாமல்

மீண்டும் என் மனைவியிடம் 05/01 அன்று 1, 00, 000 ரூபாய் என் மாமனார்

வாங்கினார். இதை நான் சிங்கப்பூரிலிருந்து என் மாமாவைக் கேட்டேன், அவர்

என்னிடம் விவாதம்

செய்தார் என் மகள் பணம் உன்னிடம் கேட்க எனக்கு அவசியம் இல்லை என்றார்,

மீண்டும் நான் என் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு உன்

அப்பா ஏன் நம் வாழ்க்கையை கெடுக்கிறார், நாம் இருவரும் சந்தொசமாக

இருப்பது உன் அப்பாவுக்கு பிடிக்கலையா? என்று கேட்டேன். அதன் பிறகு என்

மனைவியிடம் நான் ஒரு யோசனை சொன்னேன், உன் அப்பா வாங்கிய

பணத்திற்க்கு பொருமானமுள்ள இடத்தை எழுதிக்கொடுக்க சொல் என்றேன்,

ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் வாங்கிய 25, 000 ரூபாய் அதற்குரிய

வங்கியின் வட்டி சேர்த்து 1, 40, 000 ரூபாய் வருகிறது, ஆனால் என் மாமனார்

80, 000 ரூபாய் மதிப்புள்ள 28 செண்ட் விவசாய நிலத்தை மட்டுமே என்

மனைவிக்கு சுத்தக் கிரயமாக எழுதிக்கொடுத்தார். அந்த நிலத்தை அவரே

விவசாயம் செய்கிறார். என் மாமனார் மூன்று திருமணம் செய்துள்ளார்.

முதல் இரண்டு மனைவியை கொன்றுவிட்டார், இப்பொழுது என் மனைவி

-யைக் கொல்லப்போகிறார். நான் சிங்கப்பூரில் இருக்கும் போது என் மனைவி

பணம் 3, 00, 000 ரூபாய் எடுத்து L.I.C –யில் என் மனைவி பெயரில் கட்டி என்

குழந்தைகளை வாரிசுக் காட்டி என் மாமனார் நாமினியாக இருந்தார். நான்

என் குழந்தைகளுக்கு நாமினியாக எனது பெயரை மாற்றினேன். இதனால்

என் மாமனார் எனது மீது கோபம் அடைந்து என் மனைவியை திட்டினார்.

என் மனைவிக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது, அதனால் மாமனார் என்

மனைவியை ஏமாற்றுகிறார், தொழுதூரில் சென்னை TO திருச்சி மெயின்

ரோட்டில் உள்ள 9 செண்ட் இடத்தை தன் மாமியாரிடம் அந்த இடத்தில்

பிரச்சனை இருக்கு, அதனால் விற்றுவிடுவோம், என்று சொல்லி அந்த

இடத்தை விற்றுவிட்டார்கள், இதற்க்கு 2, 00, 000 ரூபாய் மட்டுமே கணக்கு

காட்டினார், மீதி பணம் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இவை அனைத்

-தும் எனக்கும், என் மனைவிக்கும் தெரியாது. இதே போல் பல வழியாக என்

மனைவி சொத்தை ஏமாற்றிருக்கிறார். இதனால் நான் மிகவும் மனநிலைப்

பாதிக்கப்பட்டு வேதனை அடைந்தேன்.

எங்களுக்கு திருமணம் நடந்ததிலிருந்து என் மனைவிக்கும், குழந்தை

-களுக்கும் இது வரை எனது சுய சம்பாதியத்தில் தான் நாங்கள் குடும்பம்

நடத்தினோம். என் மனைவி பணத்திலோ (அ) என் மாமனார் பணத்திலோ

நாங்கள் குடும்பம் நடத்தவில்லை. எங்களுக்கு 1) சிவராஜ் 9 (ஆண்),

2) வைஷ்னவி 7 (பெண்) 3) குகப்பிரியா 3 (பெண்) மூன்று குழந்தைகள் உள்ளன.

எனது அப்பாவுக்கு கடன் அடைக்க என் மனைவியிடம் 12/02/07 அன்று 1, 00, 000

ரூபாய் வாங்கிக்கொண்டு 14/09/07 அன்று எங்கள் பூர்வீக சொத்து 1, 40, 000

மதிப்புள்ள வீட்டையையும், இடத்தையும் சுத்த கிரயமாக மைனர் சிவராஜ்க்கு

கார்டியனாக எனது மனைவி பெயரில் எழுதிக்கொடுத்தோம். இதிலும் என்

மாமனார் பிரச்சனை செய்தார். ஒருவழியாக என் மாமனாரை சமாளித்து உறவு

வைத்துக்கொண்டேன்.

சிங்கப்பூரிருந்து நான் என் மனைவியிடம் சில அறிவுறைகளை சொன்னேன்,

நமக்கு மூன்று குழந்தைகள் உள்ளன, அதிலும் இரண்டு பெண் குழந்தைகள் நீ

சுயமாக சிந்தித்துப் பார் நம் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது, நீ தயவு

-செய்து உன் அப்பா பேச்சைக் கேட்காதே! என்று சொன்னேன். துளிகூட வாழ்கை

-யை நினைத்துப்பார்க்காமல் என் மாமனார் பேச்சைக் கேட்டாள். இதனால்

எங்கள் வாழ்க்கை நிம்மதியில்லாமல் சீர்குலைந்தன.

சிங்கப்பூரிலிருந்து நான் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு என் உடல்நிலை

சரியில்லாததால் ஊருக்கு திரும்பி வந்தேன், நான் அரியலூரில் சுமதி

பிசியோதெரப்பியில் சிகிச்சைப் பெற்றென். அப்பொழுது என் அம்மாவுக்கும்

உடல்நிலை சரியில்லாததால் என் மனைவியை தொழுதூரிருந்து கல்லங்குறி

-ச்சிக்கு வா என்றென், அவள் முதலில் வர மறுத்து பிறகு கல்லங்குறிச்சிக்கு

வந்தாள். இங்கு வந்த நாளிலிருந்து என் மனைவி அவள் அப்பா பேச்சைக் கேட்டு

சரியாக சமைக்காமலும், சரியாக வீட்டு வேலை செய்யாமலும், குழந்தைகளை

கவணிக்காமலும் பிரச்சனை செய்தாள், இதை நான் கேட்ட்தற்க்கு என்னை

எதிர்த்துப் பேசியதால் எங்கள் இருவருக்கும் சண்டைகள் நடந்தன, நான் கோபம்

அடைந்து தற்கொலை செய்யத் தூக்கில் தொங்கினேன், என்னை பக்கத்து

வீட்டில் உள்ளவர்கள் காப்பாற்றினார்கள், என் மாமனாரிடம் உன் மகள்

பிரச்சனை செய்கிறாள், அதனால் உன் மகளிடம் நல்ல விதமாக எடுத்துச்

சொல்லி ஒழுங்காக குடும்பம் நடத்த சொல்லுங்கள் என்றென், மறுநாள்

காலையில் என் கழுத்தில் ஏற்ப்பட்ட காயத்தால் நாங்கள் மருத்துவமணைக்கு

கிலம்பும் போது என் மாமனார் கல்லங்குறிச்சிக்கு வந்து எங்கள் இருவரையும்

விசாரிக்காமல் தன் மகளை நத்தக்குழிக்கு வா என்று கூப்பிட்டார், அதனால்

எனக்கும் என் மாமனாருக்கும் சண்டை ஏற்ப்பட்டது. என் மாமாவும் அவர்

மகனும் என்னை அடித்து அவர் மகளை அழைத்துச் சென்றதொடு இல்லாமல்

பள்ளிகூட்த்தில் இருந்த என் சின்ன மகளையும் அழைத்துச் சென்றனர்.

என் மனைவி அவள் அப்பா வீட்டில் இரண்டு மாதங்களுக்கு மேல்

இருந்தாள், ஒரு நாள் திடீரென்று என் மனைவி தொலைபேசி மூலம் தொடர்புக்

-கொண்டு என் தொழுதூர் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை நீங்கள் திருச்சிக்கு

வாருங்கள் என்றால், நானும் நடந்த பிரச்சனைகளை மறந்தும் மன்னித்தும்

திருச்சிக்கு பாட்டியைப் பார்க்க போனேன், இதிலும் என் மாமனார் என் மனைவி

-யிடம் ஃபோன் செய்து ஏன் உன் கணவனிடம் பேசினாய்? நீ இனி என்னிடம்

பேசாதே என் முகத்தில் முழிக்காதே என்று திட்டியும் மிரட்டியும் பேசினார்,

அதன் பிறகு நாங்கள் இருவரும் தொழுதூரில் சந்தொசமாக குடும்பம் நடத்தி

-னோம், நான் கடைசியாக சிங்கப்பூரிலிருந்து எடுத்து வந்த அனைத்து பணமும்

என் மருத்துவச் செலவுக்கும், குடும்பச் செலவுக்கும் செலவாகிவிட்டதால்

நான் ஒரு வாகனம் வாங்கப் போறேன், அதற்க்கு நீ தான் உதவிச் செய்யவேண்

-டும் என்று என் மனைவியிடம் கேட்டேன், அதன் பிறகு என் மனைவியிடம்

இருந்து பணமாக 95, 000 ரூபாயும் அவள் நகையை(8 பவுன்) வங்கியில் வைத்து

80, 000 ரூபாயும், மேலும் என் மனைவியின் பெயரில் வங்கியில் கடனாக 65, 000

ரூபாய் வாங்கினேன், என்னுடைய பணம் 1, 10, 000 ரூபாயும் எடுத்துக்கொண்டுக்

நான் வாகனம் வாங்குவதற்க்காக கல்லங்குறிச்சிக்கு வந்தேன், பல நாட்கள்

அலைந்து அணைக்கறையில் வாகம் வாங்கினேன், அதன் பிறகு வாகனம் பெயர்

மாற்றத்திற்க்காக சில வாரம் கல்லங்குறிச்சியில் இருந்தேன்,

அப்பொழுது என் மனைவி எனக்கு ஃபோன் செய்து நான் என் அப்பா

வீட்டுக்குப் போறேன் என்றதும் நான் என் மனைவியிடம் நீ உன் அப்பா வீட்டுக்கு

போனால் நம் வாழ்க்கையை கெடுத்துவிடுவார், அதனால் நீ போகாதே என்

-றேன், என் வார்த்தையை மீறி அவள் அப்பா வீட்டுக்குப் போனாள், என்

மாமனார் அவர் மகளை ஏன் உன் கணவனுக்கு வாகனம் வாங்க பணம்

கொடுத்த அவன் உன்னிடம் உள்ளதை எல்லாம் பிடிங்கிக்கொண்டு உன்னை

கொலை செய்துவிடுவான் என்று திட்டியும், மிரட்டியும் உள்ளார், உன்

கணவனுடன் நீ வாழ்ந்தது போதும் என் வீட்டிலேயே இரு அப்ப தான்

உன் உயிருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று சொன்னார், என் மாமனார்

சொன்னதை நம்பி என் மனைவி அவள் அப்பா வீட்டில் தங்கிவிட்டாள்,

இதன் இடைப்பட்ட நாளில் எனது அக்காவுக்கு குழந்தைப் பிறந்த்து,

அதனால் என் அம்மா மருத்துவமணைக்கு சென்றதால், எனது வீட்டில்

சமைப்பதற்க்கு ஆளில்லாத்தால் என் மனைவியை கல்லங்குறிச்சிக்கு

அழைத்தேன், அவள் வர மறுத்த்தால் நான் கோபம் அடைந்து திட்டினேன்,

நான் அன்று இரவு நத்தக்குழிக்குச் சென்று என் மனைவி குழந்தைகளை

அழைத்து கல்லங்குறிச்சிக்கு வந்தேன். இங்கு வந்த சில நாட்களில் சரியாக

சமைப்பதில்லை, நான் கேட்டதற்க்கு எதிர்த்துப் பேசிப் பிரச்சனைச் செய்தாள்

நானும் கோபத்தில் என் மனைவியிடம் சண்டைப் போட்டேன், என்

மாமாவும் அவர் மகளும் திட்டமிட்டப்படி கணவன் மனைவி சண்டையை

ஃபோன் மூலம் பதிவுச்செய்திருக்கிறார்கள், மறுநாள் காலை என் மனைவி

என்னிடம் சந்தொசமாக இருப்பது போல் நடித்து, நான் வாகனத்தை ஓட்டிச்

சென்ற பிறகு என்னிடம் சொல்லாமல் அவள் அப்பா வீட்டிற்க்கு போய்

-விட்டாள். அதன் பிறகு நானே திணமும் சமைத்து என் மகனை பள்ளிக்கு

அனுப்பிய பிறகு வாகனம் ஓட்டச் செல்வேன்.

என் மாமனாரும் என் மனைவியும் கொச்சம்கூட ஈவிரக்கம் இல்லா

-மல் எங்கள் வாழ்க்கையையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் நினைத்

-துப் பார்க்காமல் 30/01 அன்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்

என் மீது புகார் செய்தார்கள். அ.ம.கா.நிலையத்திலிருந்து எனக்கு தகவல்

கொடுத்தார்கள், நானும் காவல் நிலையம் சென்றேன், அதன் பிறகு

இருதரப்பிலும் விசாரனை நடத்தினார்கள், அ.ம.கா.நிலைய ஆய்வாளர்

அவர்கள் 16/02 அன்று கடைசியாக இருத்தரப்பிலும் விசாரனை நடத்தி

-னார்கள் அப்பொழுது ஆய்வாளர் அவர்கள் என் மனைவியிடம் என்ன

முடிவுப் பண்ணிருக்கிறாய் என்று கேட்டார்கள்,

என் மனைவியோ என்னுடைய சொத்துப் பத்திரமும், நகையும், பணமும்

மட்டும் போதும் அதை என் கணவரிடமிருந்து வாங்கிக்கொடுங்கள் இனி என்

கணவனோடு என்னால் வாழமுடியாது என்றாள், அ.ம.கா.நிலைய ஆய்வாளர்

அவர்கள் என் மனைவியிடம் பலமுறை நல்ல விதமாக எடுத்துச்

சொன்னார்கள் உன் அப்பாவைக்கு பயப்பிடாதே நான் இருக்கிறேன் உன்

கணவனுடன் குடும்பம் நடத்து, உன் குழந்தைகளின் எதிர்காலம்

கேள்விக்குறியாகிவிடும், உன் கணவனை நம்பு அவன் இனி உன்னிடம்

பிரச்சனை செய்யமாட்டான், அவன் இதற்க்கு மேல் பிரச்சனைச் செய்தால்

அதற்க்கு நான் பொறுப்பெற்க்கிறேன் என்று அ.ம.கா.நிலைய ஆய்வாளார்

அவர்கள் கூறினார்கள், என் மனைவி ஆய்வாளர் கூறிய கருத்தை ஏற்காமல்

அவள் மீண்டும் அப்பாவுக்கு பயந்து என்னுடைய சொத்துப் பத்திரமும்,

நகையும், பணமும் மட்டும் போதும் அதை என் கணவரிடமிருந்து வாங்கிக்

-கொடுங்கள் இனி என் கணவனோடு என்னால் வாழமுடியாது நான் என்

அப்பா வீட்டிலேயே இருக்கிறேன் என்று அ.ம.கா.நிலைய ஆய்வாளர்

அவர்களிடம் கூறினாள், என் மாமனாரும் நிறைய பொய்களைக் கூறி

என் மகள் வாழ்ந்தது போதும் என் மகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை

அதனால் என் மகளின் சொத்துப் பத்திரமும், நகையும், பணமும் மட்டும்

வாங்கிக்கொடுங்கள் என்றார். என் மனைவி மாமனார் வேண்டுகோளுக்கு

அ.ம.கா.நிலைய ஆய்வாளர் அவர்கள் ஆத்திரம் அடைந்து என்னிடம் இருந்த

டாடா ஏஸ் மேஜிக் வாகன சாவியை பரித்து என் மனைவியிடம் கொடுத்து

-விட்டார்கள், நான் காவல்துறை ஆய்வாளரிடம் கூறினேன், மேடம் என்

மனைவிக்கு சுயமாக சிந்திக்க தெரியாது, அவள் என் மாமாவுக்குப் பயந்து

என் மீது புகார் செய்துள்ளார், எனது மாமனாரிடம் சொல்லாமல் என்

மனைவி பணம் 2, 40, 000 ரூபாயும் என்னுடைய பணம் 1, 10, 000 ரூபாயும்

சேர்த்து வாகனம் வாங்கியது அவருக்கு பிடிக்கவில்லை, அதனால் எங்களை

பிரித்து அவள் சொத்தைப் பறித்துக்கொள்ள திட்டமிடுருக்கிறார், ஆகையால்

எங்களை தயவுசெய்து சமாதானமாக பேசி சேர்த்து வையுங்கள் என்றென்.

என் மனைவி தரப்பில் நான் என் மனைவி நகை பணத்தை ஏமாற்றிவிட்

-டேன் என்றார்கள், அதனால் என்னுடன் வாழ மறுத்து தன்னுடைய நகை

பணத்தை மட்டும் வாங்கிக்கொடுங்கள் நான் என் அப்பா வீட்டிலேயே

இருந்துக்கொள்கிறேன் என்றாள், மேடம் என் மனைவியிடம் பெற்ற

கடனுக்கு 12/12 அன்று தான் (டாடா ஏஸ் மேஜிக் TN 68 C 0246) வாகனம்

வாங்கினேன், நான் வாகனம் வாங்கிய மூன்று மாதத்தில் எப்படி மேடம் என்

மனைவியை ஏமாற்றுவேன், மேடம் நான் என்னுடைய பெயரிலும் என்

மனைவிப் பெயரிலும் (ம) குழந்தைகள் பெயரிலும் என்னுடைய சுய சம்பாதி

-யத்தில் பலவிதமான இன்சூரன்ஸ் கட்டிவருகிறேன் இதுவரை என்

மனைவியை நான் ஏமாற்றவில்லை, என் உழைப்பு தான் அவளிடம்

உள்ளது, என்னுடைய வாகனம் எனது பெயரில் உள்ளது, அந்த வாகனத்திற்

-க்கு இன்சூரன்ஸ் கூட இல்லை, என் மாமனார் என் வாகனத்தை ஓட்டி

விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் பாதிப்பு அதிகம், தயவுசெய்து என் வாகன

-த்தை என்னிடம் கொடுங்கள், என் மீது கொடுத்த புகார் அனைத்தும் எனது

மாமனார் திட்டமிட்டு அவர் மகளை தூண்டியுள்ளார், மேடம் தயவுசெய்து

என் மனைவி குழந்தைகளை என்னுடன் சேர்த்து வையுங்கள், நான் உன்மை

-யாகச் சொல்கிறேன் என் மனைவி விருப்பத்திற்கேற்ப்ப வாகனத்தை ஓட்டி

அவளிடம் பெற்ற கடனை அடைத்துவிடுகிறேன் என்னை நம்புங்கள்

என்றேன், ஆனால் அ.ம.காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் உன் மனைவி

உன்னை நம்பாமல் அவள் அப்பாவை நம்புகிறாள், நான் என்ன செய்வது

அவள் உன்னுடன் வாழ மறுக்கிறாள், அதனால் அவளிடம் நீ வாங்கிய

பணத்திற்க்கு பதிலாக உன் வாகனத்தை உன் மனைவியிடம் கொடுக்கிறேன்,

உன் மனைவி நீதிமன்றம் மூலமாக உன்னை விட்டு நிரந்தரமாக பிரிவதாக

சொல்கிறாள், அதனால் நீதிமன்றம் மூலமாக விவாகரத்து ஆகும் போது

உன் பணம் அவளிடம் இருந்தால் வாங்கிக்கொண்டு அதன் பிறகு உன்

வாகனத்தை உன் மனைவி பெயரில் மாற்றிக்கொடு என்றார்கள், நான்

மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தேன், என் மாமனார் 16/02

அன்று இரவு என் வாகனத்தை வேறொறு ஓட்டுனர் மூலம் சட்ட விரோத

-மாக ஓட்டிச்செல்லும் போது நான் தடுத்தேன், அப்பொழுது என் மாமனார்

என்னை வாகனத்தை எடுக்க வழிவிடு இல்லையென்றால் உன்னை கொலை

செய்திடுவேன் என்று மிரட்டினார், என்னை மதிக்காம உன் இஷ்டத்துக்கு

இருந்ததர்க்கு உன்னை என்னா பாடுபடுத்றேன்னு பாருன்னு சொல்லிவிட்டு

என் வாகனத்தை ஓட்டி நத்தக்குழிக்கு சென்றுவிட்டார். இப்பொழுது நான்

சம்பாதிப்பதற்க்கு வழியில்லாமல் மிகவும் மோசமாக மனநிலை பாதிக்கப்

-பட்டு உள்ளேன். என் மனைவி குழந்தைகளும் என்னுடன் இல்லை, என்

வாகனமும் என்னிடம் இல்லை, நான் சம்பாதிக்கவும் வழியில்லை இவை

நீடித்துப் போனால் என் மனநிலை பாதிக்கப்பட்டு என் மாமனாரும், என்

மனைவியும் என்க்கு செய்தத் துரோகத்தால் நான் தற்க்கொலைச் செய்துக்

-கொள்வதை விட வேறு வழியில்லை, அதனால் என் மனைவி குழந்தைகள்

மற்றும் வாகனத்தையும் என் மாமனாரிடமிருந்து மீட்டு எனக்கு நீதி

வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

ராம்குமார்(91-9787111792)


Company: Police station

Country: India   State: Tamil Nadu   City: Ariyalur

Category: People

0 comments

Information
Only registered users can leave comments.
Please Register on our website, it will take a few seconds.




Quick Registration via social networks:
Login with FacebookLogin with Google